சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் மைசூரில் நடந்து வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கிறார்கள். இதில் ரஜினி இரண்டு வேடத்தில் நடிக்கிறார். கதைப்படி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு ரஜினி அணை கட்டுவார். அந்த அணையை கட்டும் பொறியாளராக ஒரு வெள்ளைக்கார பெண் வருகிறார். அந்த கேரக்டரில் நடிக்க படக்குழுவினர் லண்டனில் ஆடிசன் நடத்தி லாரன் ஜே இர்வின் என்பவரை தேர்வு செய்தனர்.

இர்வின் அங்குள்ள ஆங்கில படங்களிலும், ஆங்கில நாடகங்களிலும் நடித்து வருகிறவர். வெஸ்ட் எண்ட் ஆன்னி, ஆலிவர் ஆகியவை இவர் நடித்துள்ள புகழ்பெற்ற நாடகங்கள். இந்தியா வந்த இர்வின் 10 நாட்கள் லிங்கா படத்தில் நடித்துவிட்டு திரும்பி விட்டார்.

படத்தில் நடித்த விஷயத்தை ரகசியமா வைக்க வேண்டும் என்பது இர்வினுக்கு தெரியவில்லை. அதனை அவரிடம் யாரும் சொல்லவில்லை போலும், லண்டனுக்கு சென்றதும் முதல் வேலையாக தான் ரஜினியுன் எடுத்த படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டு விட்டார். இதனை அங்குள்ள தமிழர்கள் சென்னைக்கு அனுப்பி விட்டார்கள்.

Post a Comment

 
Top