பிரமாண்ட இயக்குனர் Shankar, Super star Rajinikanth கூட்டணி மூன்றாவது முறையாக இணையப் போகிறதாம்...
பொதுவாகவே Rajini ஒரு படத்தில் நடித்து, அந்தப் படம் ரிலீஸான பிறகே தனது அடுத்தப் படம் குறித்து அறிவிப்பார். ஆனால்,இந்த முறை Kochadaiyaan வெளிவருவதற்கு முன்பே Linga படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். Rajiniயின் இந்த திடீர் மாற்றம் கோலிவுட்டில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்ல, Linga படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்த படத்திலும் Rajini உடனடியாக நடிக்க இருக்கிறாராம். Shankar தான் Rajiniயின் அடுத்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே Rajiniயை வைத்து Sivaji, Enthiran ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
இது இருவரும் இணையும் மூன்றாவது படம். Kalpathi Agoram இப்படத்தைத் தயாரிக்கிறார். கதாநாயகி, மற்ற கதாபாத்திரங்கள் குறித்து இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லையாம். ஐ படம் வெளிவந்த பின்னரே இது குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்க உள்ளனர்...
Post a Comment