முன்னணி கதாநாயகி நடிகையான சமந்தா கடந்த சில வருடங்களாக சருமநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா, இந்தப்பிரச்சனை காரணமாக இரு படங்களிலிருந்து கடைசி நேரத்தில் விலகினார்.
பின்னர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட சமந்தா அதன் பிறகே தமிழ் தெலுங்குப் படங்களில் மறுபடி நடிக்கத் தொடங்கினார். சரும நோயினால் பாதிக்கப்படுள்ள சமந்தாவிடம், உணவுமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் மட்டுமே இந்த சருமா நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

இல்லை என்றால் சருமநோய் உடம்பு முழுக்க பரவிவிடும் ஆபத்து உள்ளது. என்று டாக்டர்கள் எச்சரிகை செய்தனராம். எனவே உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருக்கிறார் சமந்தா.

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது அங்கே வழங்கப்படும் உணவுகளை சமந்தா சாப்பிடுவது இல்லை. ஹோட்டல் சாப்பாடும் சாப்பிடுவதில்லை. தனக்கான உணவை தன் கண் முன்னாலேயே சமைத்துக் கொடுப்பதற்காக சமையல்காரர் ஒருவரையும் படப்பிடிப்புக்கு அழைத்து வருகிறார்.

சமந்தா உண்ண வேண்டிய உணவை சமைப்பதற்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வருகிறார் அந்த சமையல்காரர். சமந்தா கேட்கும்போதெல்லாம் அவருக்கு தேவையான உணவை அவ்வப்போது சமைத்துக் கொடுக்கிறார்.

இப்படி பத்திய சாப்பாடு சாப்பிட ஆரம்பித்த பிறகு சமந்தாவுக்கு சருமநோய் மட்டுப்பட்டுள்ளதாம். தன்னுடைய ஸ்பெஷல் சாப்பாட்டு செலவுக்காக படப்பிடிப்பு நாட்களில் தயாரிப்பாளர்களிடமிருந்து ஒருநாளைக்கு 35 ஆயிரம் வசூலித்து வருகிறார் சமந்தா.

ஒரு நாளைக்கு 35 ஆயிரமா? என்று ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், இப்போது தினமும் சமந்தாவின் சாப்பாட்டுக்காக 35 ஆயிரம் கொடுக்க பழகிவிட்டனராம்.

Post a Comment

 
Top